தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணிக் கணக்குகள் குறித்த விவாதங்கள் அரசியல் களத்தை அதிரவைத்து வருகின்றன. குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்துவதாக எழுந்த யூகங்களுக்கு மத்தியில், விஜய்யின் தந்தை சந்திரசேகரின் கருத்தும், அதற்குச் செல்வப்பெருந்தகையின் அதிரடிப் பதிலும் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது
சந்திரசேகர் வைத்த 'பவர்' ஆஃபர்
திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரசேகர், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலையைப் பற்றி வெளிப்படையாகப் பேசினார். "காங்கிரஸ் ஒரு பாரம்பரியமான கட்சி, ஆனால் தற்போது அது தேய்ந்து போய்விட்டது. அவர்களுக்கு மீண்டும் பவர் கொடுக்க விஜய் முன்வருகிறார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக விஜய் கூறுவதை காங்கிரஸ் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் அந்தக் கட்சி தனது பழைய வரலாற்றைத் திரும்பப் பெற முடியும்" என்று அவர் ஒரு வலுவான ஆஃபரை முன்வைத்தார்.
ராகுல் காந்தி கொடுத்த பூஸ்ட்!
சந்திரசேகரின் இந்தக் கருத்துக்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விக்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த அவர், "நாங்கள் ஏற்கனவே 'பூஸ்ட்' சாப்பிட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். எங்கள் கட்சித் தொண்டர்களைப் பாருங்கள், எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்கள் என்று. ராகுல் காந்தி ஏற்கனவே எங்களுக்குப் பூஸ்ட், ஹார்லிக்ஸ் எல்லாம் கொடுத்து எங்களை எனர்ஜியாக வைத்துள்ளார்" என்றார்.
இருந்தாலும் நன்றி
மேலும் கிண்டலாகப் பேசிய செல்வப்பெருந்தகை, "எங்களுக்கு யாரும் புதிதாகப் பூஸ்ட் கொடுக்கத் தேவையில்லை. நாங்கள் ஏற்கனவே போன்விட்டா, ஹார்லிக்ஸ் என எல்லாவற்றையும் சாப்பிட்டு ஆரோக்கியமாகத்தான் இருக்கிறோம். இருந்தாலும், எங்களுக்குப் பூஸ்ட் கொடுப்பேன் என்று சொன்ன சந்திரசேகர் அவர்களுக்கு நன்றிகள்" என்று அவர் கூறினார்.

LIVE 24 X 7