திமுகவின் தேர்தல் குழுவினரைச் சந்தித்த திருமாவளவன் தலைமையிலான விசிக குழுவினர், தங்களது கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்கினர். இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்றதாகத் தெரிவித்த திருமாவளவன், தற்போதைய அரசியல் சூழல் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசினார்.
தேர்தல் வியூகம் மற்றும் தொகுதிப் பங்கீடு
செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன், "2026 சட்டப்பேரவைத் தேர்தல் என்பது ஒரு சாதாரண தேர்தல் அல்ல. 2021-ம் ஆண்டு நிலவிய அதே அரசியல் சூழலே தற்போதும் தொடர்கிறது. தமிழகத்தில் மதவாத அரசியலை முழுமையாக வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. அதற்காகத் திமுக மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் பயணிக்கிறோம்" என்று குறிப்பிட்டார். மேலும், திமுகவிடம் பேரம் பேசும் கட்சி விசிக அல்ல என்றும், தங்களுக்குத் தேவையான அதிகாரப் பகிர்வு குறித்து ஆலோசித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
புதுச்சேரியில் போட்டி
தற்போது தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழலில் ஆட்சியில் பங்கு கேட்கும் நிலை இன்னும் உருவாகவில்லை என்று குறிப்பிட்ட அவர், தொகுதிப் பகிர்வே ஒரு வகையான அதிகாரப் பகிர்வுதான் என்று விளக்கமளித்தார். தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரியிலும் ஒரு தனித் தொகுதி உட்பட மொத்தம் 3 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துக் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறினார். எந்தெந்தத் தொகுதிகள் என்பது குறித்துத் தற்போது விரிவாகப் பேசப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கூட்டணி குறித்து உறுதி
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "பேச்சுவார்த்தையில் சில இழுபறிகள் நீடித்தாலும், இறுதியில் திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் இருக்கும்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

LIVE 24 X 7