கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தும், மத்திய அரசை விமர்சித்தும் உரையாற்றினார்.
நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். இவ்விழாவில், குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற ரூ.1,785 கோடி மதிப்பிலான பணிகளைத் தொடங்கி வைத்ததுடன், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மக்களுக்காகத் தொடர் உழைப்பு
விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "14 வயதில் இருந்து அரசியலில் இருக்கும் நான் 50 ஆண்டு தொடர் உழைப்பால் இந்த இடத்தில் இருக்கிறேன்; நான் போகாத ஊரே தமிழ்நாட்டில் இல்லை என்பதால் மக்களுக்காகத் திட்டங்களைத் தீட்டுகிறேன். இந்த அரசில் ஒவ்வொரு நாளும் ஏதோவொரு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது; உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்காக என் சக்திக்குமீறி உழைத்து வருகிறேன்.
மத்திய அரசு மற்றும் தேர்தல் குறித்த விமர்சனம்
மகளிர் உரிமைத்தொகையை 3 மாதம் நிறுத்தி வைக்கச் சூழ்ச்சி நடந்தது; நாம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேர்தல் சமயத்தில் தமிழ்நாட்டைச் சிலர் தொடர்ந்து வட்டமிட்டு வருகின்றனர். தேர்தல் நேரம் என்பதால் தமிழ்நாட்டிற்குப் பிரதமர் மோடி வரத் தொடங்கியுள்ளார். எவ்வளவு முறை அவர் இங்கு வருகிறாரோ, அந்த அளவிற்குப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தோல்வியடையும். காரணம், தமிழ்நாட்டிற்கு அவர் ஒன்றுமே செய்யவில்லை
தமிழ்நாட்டிற்கு மத்திய பா.ஜ.க அரசு இதுவரை ஒன்றும் செய்யவில்லை. நேற்றுகூட, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் குஜராத் மாநில மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் இல்லை. அதனால்தான் இந்தத் தேர்தல் என்பது தமிழ்நாடு Vs என்.டி.ஏ. தான். பா.ஜ.க இருந்தால் வளர்ச்சி இருக்காது, வளர்ச்சி இருந்தால் அந்த இடத்தில் அவர்கள் (பா.ஜ.க) இருக்க மாட்டார்கள்.
பூஜ்ஜியம்தான், ராஜ்ஜியம் கிடைக்காது
தமிழ்நாடு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஆளப்பட வேண்டும். டெல்லியில் இருந்து ஆளப்படக்கூடாது. இதைத் தீர்மானிக்கும் தேர்தல்தான் இது. பா.ஜ.க என்கிற டப்பா எஞ்சினை நம்பி அ.தி.மு.க இருக்கிறது. அ.தி.மு.க என்கிற மூழ்கும் கப்பலை நம்பி பா.ஜ.க இருக்கிறது. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான், ராஜ்ஜியம் கிடைக்காது" என்று விமர்சித்துள்ளார்.

LIVE 24 X 7