அறநிலையத்துறையின் நிதியினை கொண்டு கல்வி நிலையங்களை ஆரம்பிப்பது தொடர்பாக அண்மையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகியது.
இந்நிலையில், தமிழக முதல்வர் கல்லூரிகளைத் திறந்து வைத்ததை கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து தி.மு.க மாணவர் அணி சார்பில் கோவையில், சிவானந்தா காலனி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. தி.மு.க மாணவரணி மாநிலச் செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாநகர் மாவட்ட தி.மு.க செயலாளர் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மேயர் ரங்கநாயகி உள்பட திமுக தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.
உறங்கிக்கொண்டு இருந்தார் எடப்பாடி:
தி.மு.க மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி பேசுகையில், “இது வெறும் அறநிலையத் துறை நிதியை எடுத்து, கல்லூரி கட்டுகிற விஷயம் மட்டுமல்ல. நீதி கட்சியின் புரட்சியை அண்ணல் அம்பேத்கர் பெருமையாகப் பேசினார். அந்த நீதி கட்சியின் பிரதிநிதியாகத் தந்தை பெரியார் ஊரெல்லாம் சென்று, எங்கள் பெயருக்குப் பின்பு சாதி வேண்டாம் என முழங்கினார். அப்பொழுது இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டு, பல ஆண்டுகளாகத் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால், கடந்த பத்தாண்டுகளாக மோடி அரசு வந்த பிறகு, நீட், பல்கலைக்கழக மாநிலக் குழு, சமஸ்கிருதத்தை வளர்க்கும் குழு, ஸ்காலர்ஷிப்பை ஒழித்தது, பள்ளிக் கல்வித் துறைக்கு வர வேண்டிய நிதிகள் நிறுத்தம், பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கொடுக்கக்கூடிய ஸ்காலர்ஷிப் நிறுத்தம் போன்ற பல்வேறு திட்டங்களை மத்திய பாஜக அரசு நிறுத்தியது. இப்படி தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியபோது உறங்கிக்கொண்டு இருந்த பழனிச்சாமி, தற்போது கோயம்புத்தூரில் ஊளையிட்டுக்கொண்டு இருக்கிறார்”.
சசிகலாவின் வாட்ச்மேன் எடப்பாடி:
”இந்தியாவில் கல்வியில் இடைநிறுத்தம் இல்லாத மாநிலப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் தமிழகத்தில் அதிகம். பழனிச்சாமி தன்னுடைய சின்னம், பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக பாஜக பின்னால் சென்று கொண்டிருக்கிறார். சசிகலா அவர்கள் பாதுகாப்புக்காக வைத்திருந்த வாட்ச்மேன் தான் பழனிச்சாமி.
அ.தி.மு.க-வில் எந்தத் தொண்டன் வேண்டுமென்றாலும் முதல்வராகலாம் என்று கூறினாரே, ஜானகி, ஜெயலலிதா, சசிகலா எல்லாம் அ.தி.மு.கவின் தொண்டர்களா? இப்படிப்பட்டவர்கள் திராவிட இயக்கங்களின் பெயர்களைச் சொல்லவே கூடாது. உங்கள் கட்சியில் இருக்கக்கூடிய திராவிடம், அண்ணாவின் பெயர்களை தயவுசெய்து எடுத்து விடுங்கள்.
நாங்கள் நீட் தேர்வுக்காகவும், புதிய கல்வி கொள்கைக்காகவும் நிறைய போராட்டங்களைச் செய்திருக்கிறோம். ஆனால், கடந்த நான்கு வருடங்களில் எடப்பாடி பழனிச்சாமி மாணவர்களுக்காக ஒரு முறையாவது நீட் வேண்டாம் என ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறாரா? மாணவர்களுக்கு வழங்கக்கூடிய உதவித்தொகையை ஏன் நிறுத்துகிறீர்கள் என மோடியிடம் ஒரு வார்த்தை கேட்டிருப்பாரா? எடப்பாடி பழனிச்சாமியின் மூளையில் இருப்பது திராவிட மூளை அல்ல.. சங்கிகளின் மூளை. நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் கல்வியின் பக்கம் நிற்கிறோம். அதனால்தான் எங்கள் முதல்வர் அனைவரையும் திரும்பத் திரும்பப் படி என கூறுகிறார்” என்று தொண்டர்கள் மத்தியில் பேசினார் ராஜீவ் காந்தி.