'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கி, தீவிரமாகச் செயல்பட்டு வரும் நடிகர் விஜய்க்கு ஆதரவாக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் குரல் கொடுத்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் அதிகாரத்திற்கு வர விஜய்யின் அரசியல் வியூகம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்
செய்தியாளர்களை சந்தித்த அவர், "60 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்து வருகின்றனர். புதிதாக யாராவது அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்றால், பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் வருபவர்களுக்கு இதே போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். கரூரில் என்ன நடந்தது என்று மக்களுக்கு தெளிவாக தெரியும். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எதற்கும் பயந்தவர் இல்லை. விஜய்க்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு
தொடர்ந்து பேசிய அவர், "காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒரு சரித்திரம் இருக்கு பாரம்பரியம் உள்ளது. வரலாறு இருக்கிறது. அப்படி வரலாறு உள்ள ஒரு கட்சி இன்று தேய்ந்து விட்டது. என்ன காரணம் என்றால் மற்ற கட்சிக்கு ஆதரவு கொடுத்து கொடுத்து அந்தக் கட்சி இன்று தேய்ந்து விட்டது.
அவர்களுக்கு இன்று பவர் இல்லை. அந்த பவரை நாங்கள் கொடுக்கிறோம் என விஜய் கூறுகிறார். அந்தப் பவருக்கு காங்கிரஸ் வந்தால் காங்கிரஸ் மீண்டும் வரலாறு படைக்கும் அந்த வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

LIVE 24 X 7