தமிழகத்தில் திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு மற்றும் அதிமுகவின் தம்பிதுரை, தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ஆகிய 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 இடங்களுக்கு மார்ச் 16-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
கூட்டணிக் கணக்குகளும் இடப்பங்கீடும்
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், தற்போதைய சூழலில் திமுக கூட்டணிக்கு 4 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. திமுக தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஓர் இடத்தைச் ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள 2 இடங்களில் திமுக நேரடியாகப் போட்டியிடுகிறது.
களத்தில் நிற்கும் வேட்பாளர்கள்
திமுக கூட்டணி: திமுக சார்பில் மூத்த உறுப்பினர் திருச்சி சிவா மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். அவருடன் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் போட்டியிடுகிறார். கூட்டணி ஒப்பந்தப்படி, தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் மற்றும் காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக கூட்டணி: அதிமுக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் தம்பிதுரை மீண்டும் போட்டியிடுகிறார். மற்றொரு இடத்தை தனது கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது. அதன்படி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேட்பாளராகக் களமிறங்குகிறார்.
தலைமைச் செயலகத்தில் மனுத்தாக்கல்
வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர். மனுக்கள் மீதான பரிசீலனைக்குப் பிறகு, போட்டியிருக்கும் பட்சத்தில் மார்ச் 16-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LIVE 24 X 7