இந்தியாவில் ஐபிஎல் தொடருக்குக் கிடைக்கும் வரவேற்பைப் போலவே, மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரும் ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது. குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்று வரும் 4-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், சிஎஸ்கே நிர்வாகம் எடுத்துள்ள முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறுதிப்போட்டியில் பெங்களூரு; இன்று எலிமினேட்டர்!
நடப்பு சீசனின் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இன்று நடைபெறவுள்ள 'எலிமினேட்டர்' சுற்றில், இரண்டாம் இடம் பிடித்த குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும், மூன்றாம் இடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி மகுடத்திற்காகப் பெங்களூரு அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும்.
தமிழக அணியின் வெற்றிடம்
தற்போதுள்ள மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை, பெங்களூரு, குஜராத், உபி மற்றும் டெல்லி ஆகிய ஐந்து மாநிலங்களைச் சார்ந்த அணிகள் மட்டுமே விளையாடி வருகின்றன. ஐபிஎல் தொடரில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் தமிழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 'சென்னை சூப்பர் கிங்ஸ்' போன்ற ஒரு வலிமையான அணி மகளிர் பிரிவில் இதுவரை இல்லை என்பது தமிழக ரசிகர்களின் நீண்ட கால குறையாக இருந்து வந்தது.
சிஎஸ்கே சிஇஓ உறுதி: உருவாகிறது புதிய அணி!
ரசிகர்களின் இந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில் சிஎஸ்கே-வின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஒரு முக்கியத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். சிஎஸ்கே நிர்வாகத்தின் அடுத்தகட்டத் திட்டம் மகளிர் கிரிக்கெட்டில் முதலீடு செய்வதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், வரும் காலங்களில் தமிழகத்தை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு புதிய மகளிர் அணி உருவாகும் என்பது உறுதியாகியுள்ளது.
முந்தைய சீசன்களின் சாதனை
மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற மூன்று சீசன்களில் முறையே மும்பை (முதல் சீசன்), பெங்களூரு (இரண்டாம் சீசன்) மற்றும் மீண்டும் மும்பை (மூன்றாம் சீசன்) ஆகிய அணிகள் கோப்பையை வென்றுள்ளன. சிஎஸ்கே தனது அணியைக் களமிறக்கும் பட்சத்தில், மகளிர் கிரிக்கெட் தொடரின் போட்டியும், விறுவிறுப்பும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LIVE 24 X 7