இங்கிலாந்தின் 'தி ஹண்ட்ரட்' கிரிக்கெட் தொடரில் முதன்முறையாக இந்திய ஐபிஎல் உரிமையாளர்கள் அணிகளை வாங்கியுள்ளனர். இதில் சன் குழுமத்திற்குச் சொந்தமான 'சன்ரைசர்ஸ் லீட்ஸ்' அணியின் தலைமைச் செயல் அதிகாரி காவ்யா மாறன், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சுமார் 2.34 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார். ஐபிஎல் மற்றும் வெளிநாட்டு டி20 லீக்குகளில் இந்திய நிறுவனங்கள் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்த்து வந்த எழுதப்படாத விதியை இது உடைத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
எதிர்ப்பும் தேசிய உணர்வும்
இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் காரணமாகப் பல ஆண்டுகளாக இந்திய உரிமையாளர்கள் பாகிஸ்தான் வீரர்களைப் புறக்கணித்து வந்தனர். இந்த நிலையில், அப்ரார் அகமதுவின் தேர்வைக் கண்டித்து இந்திய ரசிகர்கள் இணையத்தில் காவ்யா மாறனுக்கு எதிராகக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். "நாட்டை விட லாபம் முக்கியமா?" என்றும், "தேசிய உணர்வை மதித்து இத்தனை காலம் கடைப்பிடித்த நடைமுறையைச் சன்ரைசர்ஸ் கைவிட்டுவிட்டது" என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
பழைய பதிவுகளால் சர்ச்சை
அப்ரார் அகமது கடந்த காலங்களில் இந்திய ராணுவத்தையும் வீரர்களையும் கேலி செய்யும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகக் கூறி, அவரது பழைய பதிவுகளை ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்தியாவிற்கு எதிராக வெறுப்பை உமிழும் ஒருவருக்கு இந்திய நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் தருவது தேசப்பற்றுக்கு எதிரானது என்கிற ரீதியில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
ஒப்பந்தம் ரத்தாகுமா?
ஏற்கனவே வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடந்த வன்முறையின்போது, அந்நாட்டு வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ஏலத்தில் எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கடும் எதிர்ப்பு காரணமாக அவரை நீக்கியது. அதே போன்றதொரு அழுத்தம் தற்போது சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்கும் ஏற்பட்டுள்ளது. ரசிகர்களின் இந்தத் தீவிர எதிர்ப்பைத் தொடர்ந்து, அப்ரார் அகமதுவின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா அல்லது சன்ரைசர்ஸ் தனது முடிவில் உறுதியாக இருக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

LIVE 24 X 7