நடப்பு உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்றில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், அணியின் முக்கிய வீரரான ரிங்கு சிங் குடும்ப அவசர நிலை காரணமாக தாயகம் திரும்பியுள்ளார். அவரது தந்தை நான்காம் நிலை (Stage-4) கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவருடன் இருப்பதற்காக ரிங்கு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
அணிக்கு ஏற்பட்டுள்ள சவால்கள்
சூப்பர்-8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்த இந்திய அணி, தற்போது அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க 'வாழ்வா - சாவா' (Do or Die) என்ற இக்கட்டான நிலையில் உள்ளது. ஏற்கனவே தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மூன்று முறை 'டக் அவுட்' ஆகி ஃபார்ம் இன்றித் தவித்து வரும் நிலையில், தற்போது ரிங்கு சிங்கின் வெளியேற்றமும் அணிக்குக் கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
ரிங்கு சிங் இந்தத் தொடரில் விளையாடிய 5 இன்னிங்ஸ்களில் 24 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபார்மில் தடுமாறி வந்தாலும், இக்கட்டான நேரத்தில் ஆட்டத்தை மாற்றக்கூடிய அவரது திறன் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நாளை ஜிம்பாப்வேயுடன் மோதல்
நாளை சென்னையில் நடைபெறவுள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் இந்திய அணி களமிறங்குகிறது. ரிங்கு சிங் இல்லாத காரணத்தால், அவரது இடத்திற்கு ஆல்-ரவுண்டர்களான வாஷிங்டன் சுந்தர் அல்லது அக்சர் படேல் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை ஆடுகளம் சுழற்பந்து வீச்சிற்குச் சாதகமாக இருக்கும் என்பதால், கூடுதல் சுழற்பந்து வீச்சாளரை அணியில் சேர்ப்பது குறித்து பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆலோசித்து வருகிறார்.

LIVE 24 X 7