விளையாட்டு

ஐபிஎல் 2026: RCB-க்கு அடிமேல் அடி.. அடுத்தடுத்து வெளியேறும் வீரர்கள்!

நடப்பு ஐபிஎல் சீசன் முழுவதும் ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2026: RCB-க்கு அடிமேல் அடி.. அடுத்தடுத்து வெளியேறும் வீரர்கள்!
RCB
2026-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் இந்த சீசன் முழுவதும் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஆர்சிபி அணியின் கிரிக்கெட் இயக்குனர் மோ போபட் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, யாஷ் தயாள் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஆண்டு அணியுடன் இணையப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

பின்னணி மற்றும் சட்டச் சிக்கல்கள்

கடந்த 2025 ஐபிஎல் இறுதிப் போட்டிக்குப் பிறகு யாஷ் தயாள் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. அவர் மீது பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்ட ரீதியான புகார்கள் நிலுவையில் உள்ளதே அவர் அணியில் இணையாததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. ஏலத்தின் போதே அவர் விளையாட முடியாத சூழல் ஏற்படும் என்பதை எதிர்பார்த்துதான் மாற்றுத் திட்டங்களை வகுத்திருந்ததாக மோ போபட் விளக்கமளித்தார்.

ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சு நெருக்கடி

யாஷ் தயாள் மட்டுமின்றி, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டும் காயம் காரணமாகத் தொடரின் தொடக்கப் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சுப் பிரிவு சற்று பலவீனமடைந்துள்ளது. தற்போது அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர் குமார் தலைமையிலான வேகப்பந்து வீச்சுப் பிரிவில் ரசிக் சலாம், நுவான் துஷாரா மற்றும் ஜேக்கப் டஃபி போன்ற வீரர்கள் உள்ளனர். ஹேசில்வுட் விரைவில் அணியுடன் இணைவார் என்று ஆர்சிபி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.