இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) வர்ணனையாளர் குழுவிலிருந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் அதிரடியாக விலகியுள்ளார். கடந்த 23 ஆண்டுகளாகத் தன்னைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், இதற்குப் பின்னால் 'நிற பாகுபாடு' முக்கியக் காரணமாக இருப்பதாகப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக விளையாடிய மூத்த வீரரும், 1985 உலக சாம்பியன்ஷிப் தொடரின் நாயகனுமான 60 வயதான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், பிசிசிஐ வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதாகத் தனது 'எக்ஸ்' 0தளத்தில் அறிவித்துள்ளார். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வர்ணனைத் துறையில் முத்திரை பதித்த போதிலும், முக்கிய நிகழ்வுகளில் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
முக்கிய நிகழ்வுகளில் புறக்கணிப்பு
தனது பதிவில், "கடந்த 23 ஆண்டுகளாக டாஸ் போடும் நிகழ்வு மற்றும் போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழா ஆகியவற்றில் வர்ணனை செய்ய பிசிசிஐ என்னை அனுமதிக்கவே இல்லை," என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ரவி சாஸ்திரி, ஹர்ஷா போக்லே போன்ற மூத்த வர்ணனையாளர்களுக்கும், புதிதாக வருபவர்களுக்கும் மட்டுமே அந்த வாய்ப்புகள் வழங்கப்படுவதாக அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார். "எனது சுயமரியாதையை இழந்து யாருக்கும் அடிபணிந்து கிடக்க முடியாது," என்றும் அவர் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.
"நிற பாகுபாடுதான் காரணம்": ரசிகரின் கேள்விக்கு உறுதி
லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணனின் விலகல் குறித்து ஒரு ரசிகர் எக்ஸ் தளத்தில், "நீங்கள் கருப்பாக இருப்பதால் உங்களை பரிசளிப்பு நிகழ்வில் அனுமதிக்கவில்லையா?" எனக் கேட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த சிவராமகிருஷ்ணன், "நீங்கள் சொல்வது சரி. நிற பாகுபாடுதான்" எனத் தெளிவாகக் கூறி, தனக்கு நேர்ந்த புறக்கணிப்பின் உண்மையான காரணத்தை அம்பலப்படுத்தியுள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிசிசிஐ-க்கு எச்சரிக்கை
தனது இந்த விலகல் ஒரு 'நீண்ட கதையின் தொடக்கம்' மட்டுமே என்று கூறியுள்ள அவர், இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிவரும்போது கிரிக்கெட் ரசிகர்களும் பொதுமக்களும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள் என்று எச்சரித்துள்ளார். "பிசிசிஐ இதை நம்ப முடியாமல் திகைத்து நிற்கும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த முடிவு குறித்து மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட பலரும் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளனர்.

LIVE 24 X 7