தமிழ்நாடு

சாலையில் உறங்கும் நபர்களிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது!

சென்னையில் சாலையில் படுத்து உறங்கும் நபர்களை குறி வைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த நபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

சாலையில் உறங்கும் நபர்களிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது!
சாலையில் உறங்கும் நபர்களிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது
சென்னை எழும்பூர் பகுதியில் மெட்ரோவில் பணியாற்றும் ஊழியர்களின் அறைகளிலிருந்தும், சாலையில் படுத்து உறங்க கூடிய நபர்களிடமிருந்தும் ஆறு செல்போன்கள் திருடப்பட்டிருப்பதாக எழும்பூர் காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்தன. இந்த புகாரின் பேரில் எழும்பூர் போலீசார் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் ஐ எம் இ ஐ எண்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர் ஆட்டோ டிரைவர் ஆன சுரேஷ் ராஜ் என்பது தெரியவந்தது. இவர் கொடுத்த தகவலின் பெயரில் ஓட்டேரி பகுதியில் செல்போன் கடை வைத்திருக்க கூடிய காசிம் என்பவரையும் எழும்பூர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து 19 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, சுரேஷ் ராஜ் ரயில்களில் பயணிக்கும் வட மாநில தொழிலாளர்களின் செல்போனை அசந்த நேரத்தில் திருடுவதையும் அதேபோல சாலையில் போதையில் படுத்து உறங்க கூடிய நபர்களிடமிருந்தும் மேலும் மெட்ரோ ஊழியர்கள் தங்கக்கூடிய அறைக்குச் சென்று செல்போனை திருடுவதையும் வாடிக்கையாக வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

சென்னையில் எழும்பூர் உட்பட பல்வேறு இடங்களில் இது போன்று செல்போன்கள் கைவரிசை காட்டி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. திருடப்பட்ட செல்போனை இவரது நண்பர் செல்போன் கடை வைத்திருக்கும் காசிம் என்பவரிடம் கொடுத்து விற்பனை செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். 2000 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை செல்போனை விற்பனை செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.