தமிழக முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் பிரச்சார இயக்கத்தை ஜுலை முதல் நாளன்று தொடங்கிவைத்தார். திமுகவின் கொள்கைகளோடு ஒத்த சிந்தனையிலுள்ள மக்களை கட்சியில் இணைப்பது தான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம்.
இதற்காக 6 கேள்விகள் கொண்ட ஒரு படிவத்தை வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து அவர்களிடம் வழங்கி ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து திமுகவின் தலைவர்கள்,மாவட்ட செயலாளர்கள், கழக பொறுப்பாளர்கள் எடுத்துரைத்து வருகின்றனர்.
நேற்றையத் தினம் (ஜூலை 3) காலை சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின், வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் குறித்து எடுத்துரைத்தார். இது குறித்து முதல்வர் தனது சமூக வலைதளப் பதிவில், “தமிழ்நாட்டின் மண்,மொழி, மானம் காக்க, சாதி, மதம், அரசியல் கடந்து ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும். இதற்காக அடுத்த 45 நாட்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த முன்னோடிகள் என அனைவரும் பரப்புரையில் ஈடுபட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
ஆம்? இல்லை? என்கிற அடிப்படையில் 6 கேள்விகள் அடங்கிய படிவமானது பொதுமக்களிடம் திமுக சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. படிவத்தில் இடம்பெற்றிருக்கும் கேள்விகள் விவரம் பின்வருமாறு-
1. எந்த நெருக்கடியான சூழலிலும் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
2. மகளிர் தங்களின் உரிமைத்தொகையை பெற்றிடவும், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலன் காக்கப்படும் நலத்திட்டங்களை நாம் தொடர்ந்து பெற்றிட வேண்டுமா?
3. மாணவர்களுக்கான கல்வி நிதி, மாநில வளர்ச்சிக்காக வழங்கப்பட வேண்டிய நிதிப்பகிர்வு, நியாயமற்ற தொகுதி மறுவரையறை, கொடுமையான நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் போன்றவற்றிலிருந்து தமிழ்நாடு மற்றும் நம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாத்திட வேண்டுமா?
4. டெல்லியின் அதிகாரத்திற்கு அடிபணியாமல் தமிழ்நாட்டின் உரிமையை காக்கும் முதலமைச்சர் தான் நம் மாநிலத்தை ஆள வேண்டுமா?
5. இவை அனைத்தும் சாத்தியப்பட மற்றும் நிலையான ஆட்சியினை வழங்கிட அனுபவமிக்க திரு மு.க.ஸ்டாலின் போன்ற ஒரு தலைவரால் மட்டுமே முடியும் என்று நம்புகிறீர்களா?
6. அப்படியானால், நம் மாநிலத்தின் கோடிக்கணக்கான குடும்பங்களுடன், தாங்களும் தங்கள் குடும்பமும் 'ஓரணியில் தமிழ்நாடு' என கரம் கோர்க்க விரும்புகிறீர்களா?
மேற்குறிப்பிட்ட கேள்விகளை பார்த்தாலே தெரியும், இந்த கேள்விகளானது ’ஆம்’ என சொல்லும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது என. மேலும், ஓரணியில் தமிழ்நாடு என்பதன் வாயிலாக திமுகவில் இணைய அலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. 94890 94890- என்கிற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் வழங்கினால், பயனர்கள் ஒரு குறுஞ்செய்தியினை பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் 2026-சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட தேர்தல் பணியாக ’ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்றைய தினம் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ள மாவட்ட கழகச் செயலாளர்களை வீடியோ வாயிலாக தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். திமுகவின் தொண்டர்கள் குஷியோடு தேர்தல் பணிகளில் இறங்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுக தொண்டர்களை தேர்தலுக்கு தயார்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாட்டின் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக தீவிரமாக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் மற்ற கட்சிகளும் தேர்தலுக்கான முன்னோட்ட பணிகளை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.