தமிழ்நாடு

வேகத்தடையினால் விபத்து.. விபத்தில் சிக்கிய கர்ப்பிணி.. பிறந்த‌து பெண் குழந்தை!

சென்னையில் நேற்று இரவு கேகே நகர் பகுதியில் விபத்திற்குள்ளான ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணிற்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

வேகத்தடையினால் விபத்து.. விபத்தில் சிக்கிய கர்ப்பிணி.. பிறந்த‌து பெண் குழந்தை!
வேகத்தடையினால் விபத்து.. விபத்தில் சிக்கிய கர்ப்பிணி.. பிறந்த‌து பெண் குழந்தை
நேற்று தனது கணவரான கோபி என்பவரோடு சண்டையிட்டு கொண்டு திவ்யா கேகே நகர் பூங்காவில் அமர்ந்து இருந்துள்ளார். அங்கிருந்த பூங்கா ஊழியர்கள் சிலர் கணவர் கோபிக்கு தகவல் கூறிய நிலையில், கோபி அங்கு வந்த திவ்யாவை தனது இருசக்கர வாகனத்தில் நள்ளிரவு 1.30 மணியளவில் வீட்டிற்கு அழைத்து செல்லும் போது, கேகே நகர் அண்ணா மெயின் ரோட்டில் ஸ்பீடு பிரேக்கர் இருப்பது தெரியாமல் அஜாக்கிரதையாக அதிவேகமாக ஓட்டி சென்று நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் திவ்யா படுகாயம் அடைந்துள்ளார்.

பின்னால் காரில் வந்த சந்தோஷ் பாண்டியன் உட்பட சிலர் படுகாயமடைந்த கர்ப்பிணி பெண்ணுக்கு முதலுதவி அளித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து தற்போது திவ்யா ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியான திவ்யாவுக்கு பின்னந் தலையில் பலமாக அடிபட்டு அதிகளவில் ரத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து, கணவர் கோபியிடம் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கி வந்த போது ஸ்பீடு பிரேக்கர் இருப்பது தெரியாமல் இருந்ததால், கர்ப்பிணி பெண் தூக்கி வீசப்பட்டு சுமார் 30 மீ வரை தள்ளி விழுந்தார்,இதில் தலையில் பலத்த காயமுற்ற பெண்ணை தான் உட்பட 4 பேர் சேர்ந்து முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக மீட்ட இளைஞரான சந்தோஷ் பாண்டியன் வருத்தமாக தெரிவித்தார். இரவு நேரத்தில் அதிவேகமாக வாகனத்தை ஓட்ட வேண்டாம் என கோரிக்கை வைத்தார். இந்த விபத்து நடைபெற்ற ஸ்பீடு பிரேக்கரில் தொடர்ச்சியாக விபத்துகள் நடைபெறுவதாகவும், ஸ்பீடு பிரேக்கர் உரிய முறையில் இல்லாமல் இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் போவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

தொடர்ந்து, ஒன்பது மாத குழந்தை என்பதால் இன்குபேட்டர் மூலம் ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்தில் கீழே விழுந்து அடிபட்ட 9 மாத கர்ப்பிணி பெண் திவ்யா தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவருக்கும் அறுவை சிகிச்சை செய்து முடித்து தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

குறிப்பாக சென்னை கிண்டி போக்குவரத்து புலனாய்பு பிரிவு போலீசார் விரைந்து எடுத்த நடவடிக்கையால் அறுவை சிகிச்சையில் எந்த விதமான இடையூறும் இன்றி துரிதமாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் 9 மாத கர்ப்பிணி பெண் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அவரை காப்பாற்றுவதற்கு சாதகமாக விசயங்கள் உள்ளது என மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்றுவதற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்