நாமக்கல் கிட்னி திருட்டுப் புகார் தொடர்பாகத் தமிழக சட்டப்பேரவையில் அ.தி.மு.க. கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விரிவாக விளக்கினார்.
அ.தி.மு.க.வின் கவன ஈர்ப்பு தீர்மானம்
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரம் குறித்து அ.தி.மு.க. கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது. அத்துடன், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கைகளில் ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பேட்ஜ்களை அணிந்து பங்கேற்றனர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
இதற்குப் பதிலளித்துப் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கிட்னி திருட்டு நடப்பதாகத் தொலைக்காட்சியில் வெளியான செய்தியை அடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தினார். இந்த புகார் குறித்துத் தமிழக சுகாதாரத் திட்ட இயக்குநர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
நாமக்கல், திருச்சி மருத்துவமனைகளில் ஆய்வு செய்யப்பட்டதில், தவறான முறையில் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டு, சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தியும் மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சுகாதாரத் திட்ட இயக்குநரின் பரிந்துரையின் பேரில், சம்பந்தப்பட்ட இரண்டு தனியார் மருத்துவமனைகளின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டு இடைத்தரகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தலின்படி சிறப்புப் புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த முறைகேட்டுக்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகள் மீதும் பாரபட்சமின்றித் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
முந்தைய ஆட்சி மீது குற்றச்சாட்டு
தொடர்ந்து பேசிய அவர், "இதுபோன்ற கிட்னி திருட்டுகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. ஆனால், கடந்த ஆட்சி காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை" என்று அ.தி.மு.க.வைக் குற்றம் சாட்டினார்.
"நாமக்கல்லில் முறைகேடுகள் நடப்பது தொடர்பாக 2017ஆம் ஆண்டு மருத்துவத்துறைக்கு பல்வேறு ஆவணங்களை அதிகாரப்பூர்வமாக நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் அனுப்பியுள்ளார். ஆனால், அப்போதைய அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தற்போது எந்த மருத்துவமனையாக இருந்தாலும், யாருடையதாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இரு மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது" என்றும் அவர் விளக்கம் அளித்தார்.