நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நகராட்சியில் முறையாக குடிநீர் வழங்க வேண்டும், பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுகவினரிடையே மோதல்
இந்த ஆர்ப்பாட்டத்திற்காக ராசிபுரம்,வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களை நான்கு சக்கர வாகனங்களில் கட்சியினர் அழைத்து வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சங்கரசேகர் ஆதரவாளர்கள் நாமகிரிப்பேட்டை பகுதிகளில் இருந்து பொதுமக்களை நான்கு சக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளனர். இதனை அறிந்த நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் வாகனத்தை தடுத்து நிறுத்தி எனது பகுதியில் இருந்து பொதுமக்களை ஏன் அழைத்துச் செல்கிறீர்கள் என கூறி அந்த வாகனங்களை அப்பகுதியில் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சமாதானம் செய்த போலீஸ்
அப்போது வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதையடுத்து, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இச்சம்பவம் குறித்து அறிந்த ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் சம்பவ இடத்திற்கு சென்று கட்சி நிர்வாகிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களை அழைத்து வந்த கட்சி நிர்வாகிகளே கோஷ்டி மோதலில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.