பட்ஜெட் அறிவிப்புகளுக்குப் பிறகு கணிசமாகக் குறைந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் பழைய நிலையை நோக்கித் திரும்பியுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நேற்றைய 'ஏற்ற இறக்கம்'
நேற்று காலை வர்த்தகம் தொடங்கிய போது தங்கம் சவரனுக்கு ரூ. 640 உயர்ந்தது. ஆனால், வெள்ளி விலை யாரும் எதிர்பாராத விதமாக கிலோவுக்கு ரூ. 20,000 வரை சரிந்து ரூ. 2.80 லட்சத்தை எட்டியது. எனினும், மாலை நேர வர்த்தகத்தில் தங்கம் மேலும் ரூ. 1,920 அதிகரித்தது. அதேபோல் காலையில் குறைந்த வெள்ளி விலையும் மாலையில் மீண்டும் உயர்ந்து பழைய நிலையான ரூ. 3 லட்சத்தை எட்டியது.
இன்றைய அதிரடி விலை ஏற்றம்
நேற்றைய உயர்வைத் தொடர்ந்து, இன்று தங்கம் விலை வரலாறு காணாத ஒருநாள் உயர்வைச் சந்தித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 5,040 உயர்ந்து, மீண்டும் ரூ. 1,19,200 என்ற உச்சத்தை எட்டியுள்ளது. கிராமுக்கு ரூ. 630 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 14,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பட்ஜெட்டுக்கு முன்பு இருந்த அதே விலை நிலவரத்திற்கு தங்கம் மீண்டும் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலை உயர்வைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று ஏறுமுகத்தில் உள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ. 20,000 உயர்ந்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 3,20,000 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

LIVE 24 X 7