தமிழகத்தில் ஏற்கனவே சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது கேன் குடிநீர் மற்றும் தண்ணீர் பாட்டில்களின் விலையும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகி இலங்கேஸ்வரன் பேசுகையில், கடந்த 20 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் பலமுறை உயர்ந்துள்ளதையும், தற்போது மூலப்பொருட்களின் விலை 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். இத்தனை காலம் இச்சுமைகளைத் தாங்கிக்கொண்டு வியாபாரம் செய்து வந்த போதிலும், தற்போதைய சூழலில் விலையை உயர்த்தாமல் தொழிலைத் தொடர முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.
புதிய விலை நிலவரம்
இந்த விலை உயர்வு அறிவிப்பின்படி, வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு விநியோகிக்கப்படும் 20 லிட்டர் தண்ணீர் கேன்களின் விலை 5 ரூபாய் உயர்த்தப்படுகிறது. அதேபோல், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலை 30 ரூபாயாக உயர்கிறது. போக்குவரத்துச் செலவுகள், டீசல் விலை ஏற்றம் மற்றும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த விலையேற்றம் அமல்படுத்தப்படுவதாகச் சங்கம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்துச் செலவுகளின் தாக்கம்
அரசு வழங்கும் அம்மா குடிநீர் அல்லது ரயில்வே குடிநீர் குறைந்த விலைக்குக் கிடைப்பதற்கு அவர்களுக்குப் போக்குவரத்து வசதிகள் எளிதாக இருப்பதே காரணம் என்று குறிப்பிட்ட உற்பத்தியாளர்கள், தனியார் நிறுவனங்கள் தொழிற்சாலையிலிருந்து நுகர்வோரின் இருப்பிடத்திற்குக் கொண்டு சேர்க்கும் வரை பல்வேறு செலவுகளை எதிர்கொள்வதாகத் தெரிவித்தனர். தூரத்தைப் பொறுத்து விநியோக விலையில் மாற்றங்கள் இருக்கும் என்றும் அவர்கள் தெளிவுபடுத்தினர்.
தொடரும் விலைவாசி உயர்வு
கடந்த சில நாட்களாகவே எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் நிதி நெருக்கடியில் இருந்து வருகின்றனர். இத்தகைய சூழலில், அடிப்படைத் தேவையான குடிநீரின் விலையும் அதிகரித்திருப்பது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் மாதந்திர பட்ஜெட்டை வெகுவாகப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

LIVE 24 X 7