தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ள சூழலில், அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர் தேர்வுப் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. ஏற்கனவே அதிமுக, பாமக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் விருப்ப மனுக்களைப் பெற்று வரும் நிலையில், இன்று முதல் திமுகவும் இப்பணியைத் தொடங்கியுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் குவியும் தொண்டர்கள்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை முதல் திமுக நிர்வாகிகள் மற்றும் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள தொண்டர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றனர். வரும் மார்ச் 2-ஆம் தேதி வரை அண்ணா அறிவாலயத்தில் இந்த மனுக்களைப் பெற்று அங்கேயே விண்ணப்பிக்கலாம் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
விண்ணப்பக் கட்டண விவரங்கள்
சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோருக்குப் பிரிவுகளின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* பொதுத் தொகுதிகளுக்கு: ரூ. 25,000
* தனித் தொகுதிகள் மற்றும் மகளிருக்கு: ரூ. 15,000
கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், ஒருவேளை தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட யாராவது விண்ணப்பித்திருந்தால், அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும் என்றும் திமுக தலைமை தெளிவுபடுத்தியுள்ளது.

LIVE 24 X 7