கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கம் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று (ஏப்ரல் 6) சென்னையில் அதிரடியாகக் குறைந்துள்ளது.
ஈரான் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதாரக் காரணிகளால் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,120 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,10,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வார இறுதியில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 11 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
இன்றைய விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 140 குறைந்து, ஒரு கிராம் ரூ. 13,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாரத் தொடக்கத்திலேயே தங்கம் விலை ஆயிரத்திற்கும் மேல் குறைந்திருப்பது, திருமணச் சுபகாரியங்களுக்காக நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் காணப்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 2,55,000-க்கும் கடந்த வார விலையிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LIVE 24 X 7