வாரத்தின் தொடக்க நாளான இன்று, கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கம் விலை சற்றே குறைந்து நகைப்பிரியர்களுக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது.
சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள் மற்றும் மேற்காசிய நாடுகளின் போர் பதற்றங்களால் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக நிலையற்ற தன்மையில் இருந்து வந்தது. குறிப்பாகக் கடந்த சனிக்கிழமை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாயைத் தாண்டியது. இந்நிலையில், இன்று காலை வர்த்தகத் தொடக்கத்திலேயே தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,08,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ. 60 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 13,600-க்கு விற்பனையாகிறது. கடந்த சனிக்கிழமை ஒரு சவரன் ரூ. 1,09,280-க்கும், ஒரு கிராம் ரூ. 13,660-க்கும் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 250-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இருந்த அதே விலையிலேயே இன்றும் வெள்ளி நீடிக்கிறது.

LIVE 24 X 7