தமிழ்நாடு

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்.. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு!

தமிழகத்தல் நயாரா பங்குகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் வானக ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்.. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு!
Petrol Price
ஈரான் இஸ்ரோல் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து விலை அதிகரிக்கிறது. சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசலுக்கும் அந்த நிலை வரலாம் என மக்கள் மத்தியில் அச்சம் உள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் தொடர்பாக பதற்றம் வேண்டாம் என மத்திய அரசு பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் கூறுகையில், 'அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் போதுமான கச்சா எண்ணெயுடன் இயங்கி வருகின்றன. நாட்டில் போதுமான அளவு பெட்ரோல்-டீசல் இருப்பு உள்ளது. எந்தவித தட்டுப்பாடும் இல்லை. நாடு முழுவதும் சில்லறை விற்பனை நிலையங்கள் இயல்பாக இயங்கி வருகின்றன. எனவே வதந்திகளை நம்பி சில பகுதிகளில் மக்கள் அவசரப்பட்டு பெட்ரோல், டீசல் வாங்க வேண்டாம் என தெரிவித்ததுள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் மொத்தம் 7,000 நயாரா பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை நயாரா நிறுவனம் உயர்த்தி உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள நயாரா பங்குகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 'நயாரா’(தனியார்) பெட்ரோல் நிறுவனம் திடீரென உயர்த்தியுள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.107.93-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.97.22-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடலூரில் நயாரா பெட்ரோல் விலை ரூ.5.30 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.107.93க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.97.22க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.