செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள் கோயில் பகுதியில் நடந்த ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக நான்கு பேர் கொண்ட கும்பல் ஒருவரின் தலையில் கல்லைப் போட்டுத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் (எ) கருப்பட்டி சந்திரன் (35), செட்டிபுண்ணியம் பகுதியில் தங்கி நெல் அறுவடை இயந்திர டிரைவராகப் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, செட்டிபுண்ணியம் பகுதியில் வைத்து சந்திரனை நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, முன்விரோதம் காரணமாக அவரது தலையில் கல்லைப் போட்டுத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சந்திரன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நால்வர் கைது மற்றும் சிறைவாசம்
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சிங்கபெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த அஜித் (30), விழுப்புரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (30), அமுல் (24) மற்றும் விஜயகுமார் ஆகிய நான்கு பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் அனைவரும் சந்திரனுடன் ஏற்பட்ட முன்பகை காரணமாகவே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ
கொலை நடந்து பத்து நாட்களுக்குப் பிறகு, மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வைத்து சந்திரனின் தலையில் அந்தக் கும்பல் மாறி மாறி கல்லைப் போடும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7