சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 27) அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், சர்வதேசச் சூழல்களால் கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.
மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகத் தங்கத்தின் விலை நிலையற்ற தன்மையில் உள்ளது. வாரத்தின் தொடக்கத்தில் விலை கணிசமாகக் குறைந்த நிலையில், தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. அந்த வகையில் இன்று காலை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 அதிகரித்துள்ளது.
வாரத்தின் விலை நிலவரம்
இந்த வாரம் திங்கள்கிழமை தங்கம் விலை இருமுறை சரிந்து ரூ. 1,01,360-க்கு விற்பனையானது. ஆனால் அன்றைய தினமே மீண்டும் உயர்ந்து ரூ. 1,06,720-ஐ எட்டியது. செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் முறையே ரூ. 1,06,000 மற்றும் ரூ. 1,08,800 என விற்ற தங்கம், நேற்று வியாழக்கிழமை சற்று குறைந்து ரூ. 1,06,800-க்கு விற்பனையானது. இன்றைய உயர்வுக்குப் பிறகு, ஒரு கிராம் தங்கம் ரூ. 13,430-க்கும், ஒரு சவரன் ரூ. 1,07,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் சரிவு
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள போதிலும், வெள்ளியின் விலை இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. கிலோவுக்கு ரூ. 15,000 குறைந்துள்ள நிலையில், ஒரு கிராம் வெள்ளி ரூ. 245-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. போர் சூழல் மற்றும் பொருளாதாரக் காரணிகளால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்புவதால் இந்த விலை மாற்றங்கள் நிகழ்வதாகக் கூறப்படுகிறது.

LIVE 24 X 7