தமிழ்நாடு

பயணிகள் கவனத்திற்கு.. தைப்பூசத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்!

தமிழகத்தில் தைப்பூசத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகள் கவனத்திற்கு.. தைப்பூசத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்!
Special Trains
தமிழகத்தில் தைப்பூசத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில்

சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்லும் பக்தர்களுக்காகச் சிறப்பு ரயில் (06001) வரும் ஜனவரி 30-ந் தேதி இரவு 11.45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 11.15 மணிக்குத் திருநெல்வேலியைச் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு (06002) பிப்ரவரி 1-ந் தேதி இரவு 10.35 மணிக்குச் சிறப்பு ரயில் புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணிக்குத் தாம்பரத்தை வந்தடையும்.

தாம்பரம் - தூத்துக்குடி சிறப்பு ரயில்

தாம்பரத்திலிருந்து தூத்துக்குடிக்குச் சிறப்பு ரயில் (06003) வரும் ஜனவரி 31-ந் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 11 மணிக்குத் தூத்துக்குடியைச் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், தூத்துக்குடியில் இருந்து (06004) பிப்ரவரி 1-ந் தேதி இரவு 11.55 மணிக்குச் சிறப்பு ரயில் புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்குச் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

முன்பதிவு இன்று தொடக்கம்

இந்தச் சிறப்பு ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு இன்று மதியம் 2.15 மணி முதல் தொடங்கியது. தைப்பூசத் திருவிழாவிற்குச் சொந்த ஊர் செல்பவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.