தமிழ்நாடு

டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Bomb threat on IndiGo flight
டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், விமானம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் இது புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் மற்றும் சோதனை நடவடிக்கை

டெல்லியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்றும், சென்னை விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியதும் அது வெடிக்கும் என்றும் குறிப்பிட்டு, விமான நிலைய ஆணையகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது. இந்தத் தகவல் அறிந்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக உஷாராகினர்.

டெல்லியில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியவுடன், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சென்று விமானத்தில் தீவிரச் சோதனை நடத்தினர். விமானத்தில் இருந்த சுமார் 162 பயணிகள் பலத்த சோதனைக்குப் பின் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.

மிரட்டல் புரளி என உறுதி

விமானம் முழுவதும் முழுமையாகச் சோதனை செய்யப்பட்டதில், அங்கு எந்த வெடிகுண்டும் கண்டறியப்படவில்லை. இது வழக்கமான வெடிகுண்டு புரளிதான் என்று தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து விமான நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.