மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதியில் துவங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம்வரை பெய்யும். இதேபோல் செப்டம்பர் மாதம் இறுதியில் துவங்கும் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம்வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் பருவ மழை காலங்களில் மரங்கள் முறிந்து விழுவதும், மண்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைவதும் உள்ளிட்ட பல்வேறு பேரிடர்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக இன்று உதகையில் உள்ள பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா தளத்தில் உள்ள காமராஜர் அணையில் இன்று இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நீலகிரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் செயல் விளக்கம் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், யாரேனும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டால் அவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்தும், மரங்கள் முறிந்து விழுந்தாலோ, மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் இடிந்து இடர்பாடுகளில் யாரும் சிக்கிக் கொண்டாலோ, அவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது
தொடர்ந்து அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அப்பகுதி மக்களுக்குத் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. தத்ரூபமாக நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியைப் பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா தளத்திற்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.