அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை 23ஆம் தேதி முதல் முப்பெரும் அரசு விழாவாக ராஜேந்திர சோழனால் நிர்மாணிக்கப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலய வளாகத்தில் கொண்டாடப்பட உள்ளது.
முப்பெரும் விழாவின் கடைசி நாளான 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காகச் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாஜக சார்பில் செய்ய வேண்டிய பணிகள்குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு பிரதமரின் வருகையைச் சிறப்பாக்குவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். முன்னதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பிரகதீஸ்வரர் ஆலயத்தைச் சுற்றி பார்த்துப் பிரகதீஸ்வரரை வழிபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பிரதமர் நரேந்திர மோடி வரும் நாள் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நாளாகக் கருதப்படும் ராஜராஜ சோழன் அவருக்குப் பின்னால் வந்த ராஜேந்திர சோழன் ஆகியோர் மிகப் பெரிய வரலாற்றை உருவாக்கிய இதே இடத்தில் ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நரேந்திர மோடி வருகிறார்கள். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்குறித்த கேள்விக்கு 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக ஆட்சி அமைக்கும் இதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம் எனக்குக் கூறினார்.
கும்பகோணத்திலிருந்து ஜெயங்கொண்டம் வழியாக அரியலூர் வரையில் ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைகுறித்த கேள்விக்கு, இதுகுறித்து பிரதமரிடம் தெரிவிக்கப்படும் மேலும் ரயில்வே அமைச்சரைச் சந்தித்து அதற்கான ஏற்பாடுகள் நிச்சயமாகச் செய்யப்படும் பிரதமரின் வருகை முன்னிட்டு காங்கிரசாரின் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்குறித்த கேள்விக்குக் காங்கிரஸில் யாராவது இருக்கிறார்களா இருந்தால் தானே கருப்பு கொடி காட்ட முடியும்.
ஏனென்றால் பெருந்தலைவர் காமராஜரை பற்றி இவ்வளவு தூரம் திட்டி உள்ளார்கள் இதுகுறித்து காங்கிரஸார் எதுவும் கூறவில்லை எங்களுக்குத் திமுக ஆட்சியை விரட்ட வேண்டும் திமுக ஆட்சி தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது என்பதுதான் எங்களது நோக்கம் அமித்ஷா அவர்களும் அண்ணன் எடப்பாடி அவர்களும் என்ன சொல்கிறார்களோ அதன்படி கேட்போம் எனக் கூறினார்.