K U M U D A M   N E W S
Promotional Banner

அதிமுக பாஜக தேர்தல் கூட்டணி 2026 வியூகம் குறித்து நயினார் இபிஎஸ் நெல்லையில் ஆலோசனை!

நெல்லையில் உள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தேர்தல் சமயத்தில் கூட்டணியில் யார் யார் இருப்பார்கள் தெரியும் - எடப்பாடி பழனிசாமி

சட்டமன்ற தேர்தல் நெருங்கும்போது அதிமுக கூட்டணியில் யார் யார் இருப்பார்கள் எனத் தெரியும் திருச்சியில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"மக்களுடன் ஸ்டாலின் — தேர்தலுக்கான நாடகம்" - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

உங்களுடன் ஸ்டாலின், மக்களுடன் ஸ்டாலின் எல்லாமே தேர்தலுக்காகக் கொண்டு வரப்பட்ட நாடகம் தான், இதைக்கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

3-வது அணிக்குத் தமிழகத்தில் அணி இல்லை: CPI திட்டவட்டம்

தேசிய அளவில் உருவாகும் மூன்றாவது அணிக்குத் தமிழகத்தில் ஆதரவு அளிக்கப்பட மாட்டாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களைக் கிளர்த்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், சி.பி.ஐ-யின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் - நயினார் நாகேந்திரன்

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும், தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்றும், அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என்ன சொல்கிறார்களோ அதன் படி கேட்போம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா பாணியில் விஜய்…தவெகவினருக்கு ஆனந்த் போட்ட உத்தரவு

2026ல் சட்டமன்றம் எங்கள் கையில் இருக்கும் என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

EPSக்கு டஃப் கொடுக்கப்போகும் முக்கியப்புள்ளி..? ஸ்கெட்ச் போட்ட திமுக தலைமை..! முறியடிக்குமா அதிமுக?

சேலத்தில் எடப்பாடிக்கு எதிராக முன்னாள் அதிமுக முக்கியப் புள்ளியை களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாம் திமுக தலைமை. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே பிளான் போடத் தொடங்கியுள்ள திமுகவின் யுக்தி பலனளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேமுதிக-விற்கு சீட் இல்லை..! 2 சீட்டையும் தூக்கிய அதிமுக..! எடப்பாடி போடும் கணக்கு என்ன?

அதிமுக வசமுள்ள இரண்டு ராஜ்யசபா சீட் யாருக்கு என்பதில் இழுபறி நீடித்த நிலையில், இரண்டையும் நாங்களே எடுத்துக் கொள்கிறோம் என்று கூறி கூட்டணிக்கு கல்தா கொடுத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு ராஜ்யசபா சீட்டும் அதிமுக எடுத்துக் கொண்டுள்ளதால், தேமுதிகவின் நிலை என்ன? விரைவில் தெரியவரும்.

ஐ.ஆர்.எஸ் To அரசியல்: தமிழ்நாட்டில் மாற்றத்தை உருவாக்கப்போகிறாரா அருண்ராஜ்!

மத்திய அரசின் வேலையை வேண்டாம் என்று உதறிவிட்டு ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சேகர் ரெட்டியை கதறவிட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரி திராவிட கட்சிகளுக்கு என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

ஏழு மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்.. செந்தில்பாலாஜிக்கு ப்ரமோஷன் ? அறிவாலயம் அதிரடி!

தி.மு.க.வை நான்கு திசைகளிலும் இருந்து ஆபத்துகள் சூழ்ந்துள்ள நிலையில் அதை சமாளிக்க ஏழு பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறார் ஸ்டாலின், தமிழகத்தை ஏழு மண்டலங்களாக பிரித்து ஏழு பேரின் கைகளில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில், இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதே தொண்டர்களின் கேள்வி தற்போது எழுந்துள்ளது.

234 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் - நயினார் நாகேந்திரன் அதிரடி

வரும் சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

’தலீவரே தலீவரே தலீவரே..காசு எங்க தலீவரே?' செலவு செய்ய மறுக்கும் விஜய்? நிதி பற்றாகுறையில் தவிக்கும் தவெக?

தவெக தலைவர் விஜய் தேர்தல் பணிகளுக்காக செலவு செய்ய தயங்குவதால், அக்கட்சி நிதி பற்றாகுறையில் தவிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

துணைமுதல்வர் செல்வப்பெருந்தகை? போஸ்டரால் வந்த குழப்பம்..! ஷாக்கில் திமுக தலைமை..!

சென்னையில் ஆங்காங்கே தமிழக காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்காக போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளாது. இந்த போஸ்டர் தான் இன்றைய தமிழ்நாடு அரசியல் களத்தின் ஹைலைட்டாக மாறியுள்ளது. அப்படி அந்த போஸ்டரில் இருந்தது என்ன? தமிழக காங்கிரஸ் போடும் தனி ரூட் என்ன? செல்வப்பெருந்தகை வைத்திருக்கும் விளக்கம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

“பிளவுவாத பாஜக...மக்கள் விரோத திமுக”- தவெக தலைவர் விஜய் சாடல்

தி.மு.க.வை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அ.இ.அ.தி.மு.க.வைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க. மீண்டும் கைப்பிடித்துள்ளது