தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் நேருவின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன், நேருவின் மகனும், பெரம்பலுார் தொகுதி தி.மு.க. எம்.பி.,யுமான அருண் ஆகியோர் வீட்டில் கடந்த 2 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு பிறகு நேருவின் சகோதரர்கள் மற்றும் மகன் ஆகியோர் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கி உள்ளனர்.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மற்றும் கே.என்.நேருவின் மகன் அருண் ஆகியோருக்கு தொடர்புடைய நிறுவனஙளில் தொடர்ந்து 2 நாட்கள் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதனால், சோதனையின் இடையில் விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் கே.என்.ரவிச்சந்திரனை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து பல்வேறு கேள்விகளை முன்வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் ஏப்.9 ஆம் தேதி அமலாக்கத்துறையின் சம்மனின் அடிப்படையில் மதியம் 2.20 மணியளவில் கே.என்.ரவிச்சந்திரன் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார். குறிப்பாக வங்கி பணப் பரிவர்த்தனை குறித்த எந்த கேள்விகளுக்கும் ஆதாரப்பூர்வமாக ரவிச்சந்திரன் பதில் அளிக்கவில்லை என்று கூறப்பட்டது.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் இயக்குநராக உள்ள நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து 30 கோடி ரூபாய் கடன் பெற்றது. அந்த கடன் தொகையை அந்த நிறுவனம் சகோதர நிறுவனங்களுக்கு திருப்பி விட்டதாகவும், இதன் மூலம் தங்களுக்கு 22 கோடியே 48 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வங்கி சார்பில் புகாரளிக்கப்பட்டது.
இந்நிலையில், பத்துக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் குறித்தும், Truedom epc, TVH நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் மற்றும் 13 ஆண்டு கால பண பரிவர்த்தனை குறித்தும் தகுந்த விபரங்களோடு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் அதற்குரிய பதிலை எழுத்துப் பூர்வமாகவும் அதனை அமலாக்கத்துறையினர் வீடியோ பதிவும் செய்தனர்.
சுமார் பத்து மணி நேரமாக கே.என் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து, இன்று மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கே.என். ரவிச்சந்திரன் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.