தமிழ்நாடு

பொய் கூறுவதையே எடப்பாடி பழனிசாமி வேலையாக வைத்துள்ளார் - முதலமைச்சர் விமர்சனம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொய் கூறுவதையே வேலையாக கொண்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

பொய் கூறுவதையே எடப்பாடி பழனிசாமி  வேலையாக வைத்துள்ளார்  - முதலமைச்சர் விமர்சனம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக நீலகிரி மாவட்டம் உதகை சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,
அங்குள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவ மாணவர் விடுதிகளை ஆய்வு செய்தார். ஆய்வுக்கு வந்த முதலமைச்சருடன் செவிலியர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், மக்களிடையே மருத்துவமனைக்கு வரவேற்பு உள்ளதாகவும், சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.முன்னதாக அதிகாலை நடைபயணம் மேற்கொண்போது, செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளதாக நெகிழ்ச்சி அடைந்தார். மேலும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் உண்மை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறினார்.

பொய்களை கூறுவதையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வேலையாகக் கொண்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், டெல்லியில் அமித்ஷாவை இபிஎஸ் சந்தித்தது எதற்கு? என்பது நாட்டிற்கே தெரியும் என்றும், சந்திப்பு குறித்து இபிஎஸ் பொய் சொன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்தார். பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பிற்கு அளித்த ஆதரவைப்போல் கொடநாடு வழக்கின் தீர்ப்பிற்கு இபிஎஸ் ஆதரவு அளிப்பாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.

நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். பொள்ளாச்சி வழக்கைப் போலவே கொடநாடு வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.