தமிழ்நாடு

எதிர்பாரததை எதிர்பாருங்கள்.. முடிவுக்கு வந்த வெயில்காலம்.. தொடங்கிய மழைக்காலம் – பிரதீப் ஜான்

கோடை வெப்பம் இன்றுடன் முடிவதாகவும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய வடதமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

எதிர்பாரததை எதிர்பாருங்கள்.. முடிவுக்கு வந்த வெயில்காலம்.. தொடங்கிய மழைக்காலம் – பிரதீப் ஜான்
முடிவுக்கு வந்த வெயில்காலம்.. தொடங்கிய மழைக்காலம் – பிரதீப் ஜான்
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது, இன்றுடன் கோடைக்காலம் முடிவடைகிறது. இந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கு மிகச் சிறப்பான ஒரு வினோத காலநிலை ஆண்டாக அமைந்துள்ளது. வழக்கமாக மே மாதத்தில் காணப்படும் கடும் வெயிலும், வெப்ப அலைகளும் இந்த வருடம் எங்கும் பதிவாகவில்லை. இதனால், கடந்த 25 ஆண்டுகளில் 2004, 2018 மற்றும் 2022 போன்ற வருடங்களைப் போலவே, 2025-ல் சென்னையில் ஒரு நாளும் வெப்பநிலை 40°Cஐ கடந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மே மாத இறுதியில் அல்லது ஜூன் தொடக்கத்தில் உருவாகக்கூடிய கிழக்கு-மேற்கு திசை காற்றழுத்த பரிமாற்ற மண்டலம் (East-West Shear Zone) இந்த ஆண்டில் முற்றிலும் வித்தியாசமாக, முதல் முறையாக மே மாத நடுப்பகுதியிலேயே உருவாக ஆரம்பித்துள்ளது. இந்த பரிமாற்ற மண்டலத்தின் விளைவாக, அரபிக் கடலும்,வங்காள விரிகுடாவிலும் குறைந்த காற்றழுத்த மண்டலங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதில் அரபிக் கடலில் உருவாகும் மண்டலம் புயலாக வலுப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இந்த சுற்றுவட்ட அலை இன்னும் நெருக்கமாக வட தமிழகக் கடற்கரை (KTCC) பகுதிகளுக்கு வரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிழக்குத் திசை காற்றுகள் நேரடியாக தமிழகத்தின் வடக்கு மாவட்டங்கள் மற்றும் சென்னையை தாக்கும். இதனால் வருகிற நாட்களில் மழை அதிகரிக்கப்போகும் – பரபரப்பான வார இறுதி காத்திருக்கிறது.

கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், பாண்டி, விழுப்புரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காரைக்காலின் டெல்டா பகுதிகள், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி, தர்மபுரி, திருப்பத்தூர், ஈரோடு போன்ற இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பெங்களூருவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

மே மாதத்தில் 40°C வரை வெப்பநிலை இல்லாத ஒரு அரிய ஆண்டாக உள்ளது. எப்போதும் மே மாதத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், இனி வரும் காலங்களில் வெப்பநிலை குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 10°C என குளிர்ச்சியாக இருக்காது என்றும், ஆனால், சாதாரண மே மாத வெப்பத்துடன் ஒப்பிட்டால் இம்முறை பரவலாக சீரான, சற்றே குளிர்ச்சியான காலநிலையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.