கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிகுடி கிராமத்தில் அமைந்துள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சுற்றுவட்டார கிராமத்திலிருந்து, சுமார் 15,000 நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
வீணாகும் நெல்மூட்டைகள்
இந்நிலையில் 15 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் காத்துக் கிடக்கும் நிலையில், கடந்த ஒரு வார காலமாக விடாமல், மழை பெய்து வருவதால், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல், அதிகாரி அலட்சியம் காட்டுகின்றனர். இதனால் சுமார் 5000 நெல் மூட்டைகள், மழையில் நனைந்தும், மறு முளைப்பு தன்மை ஏற்பட்டும், பூசனம் பிடித்தும் சேதமடைந்து விட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் நாள்தோறும் பகலில் நெல்மணிகளை காய வைப்பதாகவும், ஆனால் இரவு நேரங்களில் மழை பெய்வதால், என்ன செய்வது என்று தெரியாமல், விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். மேலும் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக கூறி, சம்பந்தப்பட்ட நிலைய பணியாளர், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல், காலம் தாழ்த்துவதாகவும், இதனால் விவசாய நிலத்தில் அறுவடை செய்த நெல் மூட்டைகளையும், கொண்டுவர முடியவில்லை. ஏற்கனவே விற்பனைக்காக வைக்கப்பட்ட நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய முடியாததால் மழையை வீணாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் கோரிக்கை
இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக, நெல்லின் ஈரப்பதத்தை காரணம் காட்டி விவசாயிகளின் நெல் மூட்டுகளை கொள்முதல் செய்யாமல் தவிர்ப்பதை உடனடியாக கைவிட்டு, அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.