தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறையின் பெயரில் வீடியோ அழைப்பு மூலம், கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி, ரூ.53,000 மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி குறித்து கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தின் பின்னணி
கோவை புளியகுளம் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் பீட்டர். இவரது மகன் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அவருக்கு தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறை என்ற பெயரில் இருந்த ஒரு வாட்ஸ்அப் கணக்கிலிருந்து வீடியோ அழைப்பு வந்துள்ளது. அழைப்பை ஏற்றுப் பேசியபோது, எதிர்புறம் பேசிய நபர் தனது முகத்தைக் காட்டாமல், “மத்திய அரசின் திட்டத்தின் கீழ் உங்கள் மகனுக்கு ரூ.38,500 கல்வி உதவித்தொகை வந்துள்ளது. அதை அனுப்புவதற்கு உங்கள் கூகுள் பே (Gpay) க்யூஆர் கோடு மற்றும் வரும் ஓ.டி.பி. எண்ணைக் கூற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
சார்லஸ் பீட்டருக்குக் க்யூஆர் கோடு எடுப்பது சரியாகத் தெரியாததால், அருகில் இருந்த அவரது மாமாவின் உதவியைக் கேட்டு க்யூஆர் கோடைக் காட்டியுள்ளார். அப்போது, சார்லஸ் பீட்டரின் வங்கிக் கணக்கில் பணம் குறைவாக இருந்ததால், “இந்தப் பணம் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் இருப்புள்ள வங்கிக் கணக்கிற்கு மட்டுமே அனுப்ப முடியும்” என்று அந்த நபர் கூறியுள்ளார்.
ரூ.53 ஆயிரம் கொள்ளை
இதையடுத்து, சார்லஸ் பீட்டர் மற்றும் அவரது மாமா இருவரும், “மாமாவின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்புங்கள்” என்று கூறி, அவரது Gpay க்யூஆர் கோடைக் காண்பித்துள்ளனர். அப்போது, மாமாவின் மொபைல் எண்ணுக்கு இரண்டு, மூன்று முறை ஓ.டி.பி. வந்துள்ளது. அந்த ஓ.டி.பி. எண்களையும் அவர்கள் நம்பிக்கையுடன் அந்த நபரிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், பணம் இவர்களுக்கு வருவதற்கு மாறாக, மாமாவின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் ரூ.53,000 எடுக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், “பணம் எங்களுக்கு வராமல் எங்கள் கணக்கில் இருந்து எடுக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளனர். அப்போது, அந்த நபர் உடனடியாக அழைப்பைத் துண்டித்துள்ளார்.
இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சார்லஸ் பீட்டரும், அவரது மாமாவும் உடனடியாக ராமநாதபுரம் காவல் நிலையத்திலும், பின்னர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.