தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை எட்டிய நிலையில், வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை மீண்டும் எட்டியுள்ளது.
தங்கம் விலை நிலவரம்
கடந்த டிசம்பர் 11-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.96,400-க்கு விற்பனையான நிலையில், டிசம்பர் 12-ம் தேதி ஒரே நாளில் ரூ.2,560 உயர்ந்து, ரூ.98,960-க்கு விற்பனையானது. அதன் தொடர்ச்சியாக, டிசம்பர் 15-ம் தேதி சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையாகி, புதிய உச்சத்தைத் தொட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (டிசம்பர் 16) சவரனுக்கு ரூ.1,320 குறைந்து, ஒரு சவரன் ரூ.98,800-க்கு விற்பனை ஆனது. நேற்றைய (டிசம்பர் 17) நிலவரப்படி, மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.99,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தங்கம் விலை இன்றுமீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,440-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.99,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையின் புதிய உச்சம்
தங்கம் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து புதிய உச்சங்களை அடைந்து வருகிறது. கடந்த டிசம்பர் 11-ம் தேதி ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்துக்கு விற்பனையாகி உச்சம் தொட்டது. நேற்று முன்தினம் விலை சற்று குறைந்திருந்த நிலையில், நேற்று (டிசம்பர் 17) அதிரடியாக கிராமுக்கு ரூ.11-ம், கிலோவுக்கு ரூ.11 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.
இந்நிலையில், வெள்ளி விலை இன்று (டிசம்பர் 18) வரலாறு காணாத வகையில் மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.224-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LIVE 24 X 7