தமிழ்நாடு

தாறுமாறாக உயரும் தங்கம் விலை.. சவரன் ரூ.480 அதிகரிப்பு!

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது.

தாறுமாறாக உயரும் தங்கம் விலை.. சவரன் ரூ.480 அதிகரிப்பு!
Gold Rate
இந்த ஆண்டு தொடக்கம் முதலே தாறுமாறாக உயர்ந்து வந்த தங்கம் விலை, மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. வாரத் தொடக்க நாளான இன்று (செப். 29) ஒரு சவரன் தங்கம் ரூ.85,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலை ஏற்ற இறக்கம்

கடந்த 23-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.85 ஆயிரத்தை தாண்டி இதுவரை இல்லாத உச்சத்தைப் பதிவு செய்திருந்தது. அதன் பிறகு சற்றுக் குறைந்து ரூ.84 ஆயிரத்துக்கு வந்தது.

ஆனால், கடந்த 26-ஆம் தேதி முதல் தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கியது. நேற்று முன்தினம் (செப். 27), கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.85,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் இதே விலைக்கே விற்பனை ஆனது.

இன்றைய விலை நிலவரம்

இந்த நிலையில், வாரத் தொடக்க நாளான இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.10,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.85,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் உயர்வு

தங்கத்துடன் சேர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.160-க்கு விற்பனையாகிறது. கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து, பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள், டாலரின் மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்கள் ஆகியவை இந்தத் தொடர்ச்சியான விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.