தமிழ்நாடு

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் அதிகரிப்பு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஓரே நாளில் கிராமக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.95,840 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் அதிகரிப்பு!
Gold Rate
நாளுக்கு நாள் ஏற்றம் கண்டு வரும் தங்கத்தின் விலை, இன்றும் (நவம்பர் 29) அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து, ரூ.95,840-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் தங்கத்துடன் போட்டியிட்டு கணிசமான உயர்வைச் சந்தித்துள்ளது.

நேற்றைய மற்றும் இன்றைய விலை நிலவரம்

நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.94,720-க்கு விற்பனையானது. அப்போது கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் கிராமிற்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.183-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இரண்டும் கடுமையாக உயர்ந்துள்ளன.

தங்கம் மற்றும் வெள்ளி விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.95,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,980-க்கு விற்பனை ஆகிறது.

இதே போன்று வெள்ளியும் தங்கத்துடன் போட்டு போட்டி கொண்டு விலை ஏற்றம் கண்டு வருகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.192-க்கு விற்பனை ஆகிறது. நாள் தோறும் தங்கம், வெள்ளி விலை ஏறி வருவதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.