தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக ஏற்ற-இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த பிப்ரவரி 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தங்கம் விலை தொடர்ந்து சரிவைக் கண்டது. அந்த மூன்று நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ. 2,640 வரை குறைந்து, நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ. 1,13,840 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை நிலவரம்
தொடர் சரிவுக்குப் பிறகு, நேற்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,160 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 1,16,000-க்கு விற்பனையானது. இந்த நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,15,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 80 குறைந்து ரூ. 14,420-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாற்றமில்லாத வெள்ளி விலை
தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், வெள்ளியின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 270-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

LIVE 24 X 7