தாம்பரம் மாநகரப் பகுதியில் கடந்த சில நாட்களாக 'டின்டர்' (Tinder) போன்ற செயலிகள் மூலம் நபர்களைத் தொடர்பு கொண்டு, ஆசை வார்த்தை கூறி வரவழைத்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து வந்த கும்பலைத் தனிப்படை போலீசார் பிடித்துள்ளனர். இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவன் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழிப்பறி சம்பவம்
கடந்த 22-ஆம் தேதி சோழிங்கநல்லூர் டி.என்.எச்.பி (TNHB) சாலை வழியாகச் சென்று கொண்டிருந்த சௌந்தரராஜன் என்பவரை ஒரு பெண் வழிமறித்துப் பேசியுள்ளார். அப்போது திடீரென ஒரு கும்பல் அவரைச் சூழ்ந்துகொண்டு, கத்தியைக் காட்டி மிரட்டி அரை சவரன் தங்கச் செயின் மற்றும் பணத்தைப் பறித்துள்ளது. அங்கிருந்தவர்களில் ஒருவன் தன்னைத் தூத்துக்குடி ரவுடி 'ஐகோர்ட்' மகாராஜன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, புகார் அளித்தால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டிச் சென்றுள்ளான். இது குறித்து சௌந்தரராஜன் அளித்த புகாரின் பேரில், தாம்பரம் மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்படி 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடி சிக்கியது எப்படி?
போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், சோழிங்கநல்லூர் பகுதியில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி 'ஐகோர்ட்' மகாராஜன், அவரது மனைவி பிரியதர்ஷினி மற்றும் கூட்டாளி தனலட்சுமி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். இதில் மகாராஜன் என்பவர் 'ஏ பிளஸ்' (A+) கேட்டகிரி ரவுடி ஆவார். கைதானவர்கள் மீது ஏற்கனவே மதுரை, தூத்துக்குடி, புதுக்கோட்டை மற்றும் சென்னை கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆள் கடத்தல், கொலை, கொள்ளை எனப் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
தாசில்தார் மற்றும் வழக்கறிஞருக்கு வலை
இந்தக் கும்பலின் கொள்ளை முறை மிகவும் நூதனமானது. இவர்கள் டின்டர் ஆப் மூலம் வசதியானவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களைத் தனிமையான இடத்திற்கு வரவழைத்துப் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2025 டிசம்பரில் மேடவாக்கத்தில் ஒரு வழக்கறிஞரை வரவழைத்து 25 பவுன் நகைகளையும், கடந்த வாரம் செம்மஞ்சேரி பகுதியில் ஒரு தாசில்தாரை இதே முறையில் ஏமாற்றி 25 பவுன் நகைகளையும் இவர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட நகைகள்
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 50 பவுன் தங்க நகைகள் மற்றும் 2.50 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதானவர்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை தொடரும் எனத் தாம்பரம் காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LIVE 24 X 7