பெங்களூரில் ஐடி கம்பெனியில் டீம் லீடராக பணிபுரியும் 28 வயது இளம்பெண்ணும் கொரியர் கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரியும் 26 வயது இளைஞரும், காதலித்து வந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு மதுரவாயல் பகுதியில் ஒன்றாக சேர்ந்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கணவன் அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வந்த பிரச்சனை செய்ததால், கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
குடும்ப உறவில் தொடர்ந்து பிரச்னைகள் எழுந்து வந்த நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன் ஊட்டிக்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது விடுதியில் மனைவியை நிர்வாணமாக புகைப்படம் எடுத்த கணவர், அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட போவதாக கூறி மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மனைவி கணவரிடம் கெஞ்சி மன்றாடியுள்ளார்.
இதனையடுத்து தம்பதியினர் சென்னை திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட போவதாக கூறி மிரட்டியுள்ளார். கணவரின் நடவடிக்கையால் மனமுடைந்த மனைவி நேற்று இரவு கணவரை அறையில் வைத்து பூட்டிவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார், மது போதையில் இருந்த இளம் பெண்ணின் கணவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்து திருமணம் முடித்த மனைவியே குடிப்போதைக்கு அடிமையாகிய கணவர் ஒருவர் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடப்போவதாக மிரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.