தமிழ்நாடு

கத்திலி அருகே சட்டவிரோத கருக்கலைப்பு மையம்- 5 பேரை கைது செய்த போலீஸ்

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா எனச் சட்டவிரோதமாகக் கண்டறிந்து பணம் பறித்த வந்த கணவன்- மனைவி உட்பட புரோக்கர்கள் ஐந்து பேர் கைது

 கத்திலி அருகே சட்டவிரோத கருக்கலைப்பு மையம்- 5 பேரை கைது செய்த போலீஸ்
சட்டவிரோத கருகலைப்பு மையம் தொடர்பாக 5 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த பரதேசி பட்டியில் சட்ட விரோதமாகக் கருவில் இருப்பது ஆணா பெண்ணா எனக் கண்டறிந்து பணம் பறித்து வருவதாக மருத்துவ மற்றும் ஊரக நல பணிகள் இணைய இயக்குனர் ஞான மீனாட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சட்டவிரோத கர்ப்ப பரிசோதனை மையம்

இதுகுறித்து ஞானம் மீனாட்சி கந்திலி காவல் நிலையிலிருந்து கொடுத்த புகாரின் பேரில் தனிப்படையை அமைத்துப் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த அவ்வழியாக 8 பெண்கள் ஆட்டோவில் இறங்கினர். அவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர்.

விசாரணையில், அவர்கள் 8 பேரும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணிகள் என்பதும், தங்கள் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? எனப் பரிசோதனை செய்து கொள்வதற்காகத் தங்களை சிலர் இங்கு வரக்கூறியதாகக் கூறினர்.

5 பேர் கைது

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராஜமங்கலம் பகுதியைச் சார்ந்த சிவசக்தி (40) அவருடைய மனைவி ஜோதி (38) மற்றும் புரோக்கர்கள் கோவிந்தன் (50) ரஞ்சிதம் (40), அமலா (50) ஆகிய ஐந்து பேரைக் கைது செய்தனர். மேலும் இதுபோல் கருவில் இருப்பது ஆணா பெண்ணா எனத் தெரிந்து கொள்வது சட்டப்படி குற்றம் எனக் கர்ப்பிணி பெண்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அவ்வப்போது பணத்திற்காகக் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? எனக் கண்டறிந்து கரு கலைப்பு சம்பவம் அரங்கேறி வருவதும் மேலும் கைதாகி வருவதும் வாடிக்கையாகி உள்ளது.