தமிழ்நாடு

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ் குமார் உத்தரவு!

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனிஷா ஹுசைன், லட்சுமி, சோனல் சந்திரா, ஜவஹர், சுஹாசினி, திவ்யா, சஜிதா உள்ளிட்ட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ் குமார் உத்தரவு!
தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ் குமார் உத்தரவு!
தமிழகத்தில் ஒன்பது ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ளார்.


சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவின் ஐஜியாக இருந்த அனிஷா ஹூசைன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த லட்சுமி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசு பணியில் இருந்த டிஐஜி சோனல்சந்திரா சென்னை போக்குவரத்து காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்..

சிபிசிஐடி வடக்கு மண்டல எஸ்பியாக இருந்த ஜவஹருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி சென்னை பிரிவையும் கூடுதலாகக் கவனிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவை நகர காவல் தலைமையக துணை ஆணையராக இருந்த சுஹாசினி சென்னை போக்குவரத்து காவல் மேற்கு மண்டல துணை ஆணையராகவும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை ஏஎஸ்பியாக இருந்த திவ்யா எஸ்பியாகப் பதவி உயர்வு பெற்று கோவை நகர காவல் தலைமையக துணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை ஏஎஸ்பியாக இருந்த திவ்யா எஸ்பியாகப் பதவி உயர்வு பெற்று கோவை நகர காவல் தலைமையக துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறை கிழக்கு மண்டல இணை ஆணையராக இருந்த விஜயகுமார் சென்னை போக்குவரத்து காவல் தெற்கு மண்டல இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை 6-வது பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் துணை கமாண்டண்ட்டாக இருந்த சாஜிதா எஸ்பியாகப் பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி நிர்வாகப் பிரிவு எஸ்பியாகவும், சென்னை காவல்துறை கிழக்கு மண்டல இணை ஆணையராக இருந்த விஜயகுமார் சென்னை போக்குவரத்து காவல் தெற்கு மண்டல இணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

ரிப்பன் மாளிகையில் 13 நாட்கள் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடந்தது. அந்தப் பகுதி விஜயகுமார் கட்டுப்பாட்டில் வருவதால் அதன் காரணமாக அவர் மாற்றப்பட்டதாகக் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும் சென்னை போக்குவரத்து காவல் தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்த பண்டிட் கங்காதர் சென்னை காவல்துறை கிழக்கு மண்டல இணை ஆணையராக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.