திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது தான் நகைச்சுவையாக இருக்கிறது. களத்திற்கு ஏன் வரவில்லை? என விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய்யின் பேச்சு
கடந்த 18 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம், ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த விஜயமங்கலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், "களத்தில் இருப்பவர்கள் தான், எங்களால் எதிர்க்க முடியும். களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க எங்களுக்கு நேரமில்லை" என்று தெரிவித்தார். மேலும், அவர் தங்களது கொள்கை எதிரி பாஜக என்றும் அரசியல் எதிரி திமுக என்றும் தெரிவித்தார்.
'நகைச்சுவையாக இருக்கிறது'
இந்த நிலையில் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், "களத்தில் இருப்பவர்கள் பற்றி பேசுவோம். களத்தில் யார் இருக்கிறார்? கட்சி ஆரம்பித்து விக்கிரவாண்டி தொகுதி, ஈரோடு கிழக்கு தொகுதி இடை த்தேர்தலில் நிற்காமல் போனது ஏன்? ஈரோட்டில் வந்து நிற்க வேண்டியது தானே? திமுகவும், நாம் தமிழர் கட்சி மட்டும் தானே மோதியது. இந்தியாவை ஆட்சி செய்யும் பாஜக வரவில்லை. அதிமுக வரவில்லை. களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது தான் நகைச்சுவையாக இருக்கிறது. களத்திற்கு ஏன் வரவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.
'ஈரோட்டு கடப்பாறை துருப்பிடித்துவிட்டது'
மேலும் அவர், "ஈரோடு கடப்பாரை என விஜய் யாரை சொல்கிறார் என்று உங்களுக்கு தெரியாதா? ஈரோட்டு கடப்பாரையா? அதெல்லாம் துருப்பிடிச்சு, பழைய இரும்புக்கு போட்டு பேரிச்சம்பழம் வாங்கியாச்சு. இப்பதான் தெரிய வருது.. அப்போ தெரியலையா தீய சக்தினு?" என்று விமர்சித்தார்.
'எனக்கு நான்கு எதிரிகள்'
தொடர்ந்து பேசிய அவர், "என் தம்பி விஜய்க்கு ஒரே ஒரு எதிரி தான். ஆனால் எனக்கு நான்கு எதிரிகள். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என்று நான்கு பேருடன் நான் மல்லுக்கட்டுறேன். தம்பி விஜய் கட்சி இப்போதுதான் தொடங்கியிருக்கிறார். அதை தட்டிக்கொடுத்து தான் வளர்க்கவேண்டும். ஆனால் களத்தில் நாதக யார் என்று இந்த 4 பேருக்கும் நன்றாகவே தெரியும்.
மறைந்த தலைவர்களின் பெயரைச் சொல்லி ஏமாற்றுவதா?
எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி என மறைந்த தலைவர்களின் பெயரைச் சொல்லி இன்னும் எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்றுவீர்கள்? கொள்கையைச் சொல்லி ஓட்டு கேட்பது நாதக மட்டும் தான்; மற்றவர்கள் சின்னத்தை காட்டியும், பணத்தை காட்டியும் தான் ஓட்டு கேட்கிறார்கள். பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டால், அது நோட்டில் இருக்கும் காந்திக்கு போடும் ஓட்டு" என்று தெரிவித்தார்.

LIVE 24 X 7