சென்னை தியாகராய நகரில் தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி உட்பட 13 தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 7 ) நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தொமுச தலைவர் நடராஜன், “17 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதென ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி வரும் 9 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், வேலைவாய்ப்பின்மை, மத்திய பொது துறை நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்புதல் , பொதுத்துறையை தனியார் வாசம் ஒப்படைக்க கூடாது , திருத்தி அமைக்கப்பட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டமானது நடைபெற உள்ளது .
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப் பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். அதன்படி வரும் 9 ஆம் தேதி திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தமிழகம் முழுவதும் நடைபெறும்” என்றார்.