தமிழ்நாடு

மருத்துவக் கல்வி சேர்க்கை.. போலிச் சான்றிதழ் பயன்படுத்திய 20 மாணவர்கள் கண்டுபிடிப்பு!

தமிழகத்தில் இளங்கலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் இதுவரை 20 விண்ணப்பதாரர்கள் போலிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்துள்ளது தெரியவந்துள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்வி சேர்க்கை.. போலிச் சான்றிதழ் பயன்படுத்திய 20 மாணவர்கள் கண்டுபிடிப்பு!
மருத்துவக் கல்வி சேர்க்கை.. போலிச் சான்றிதழ் பயன்படுத்திய 20 மாணவர்கள் கண்டுபிடிப்பு!
சென்னை சைதாப்பேட்டையில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் சென்னை ஆண்கள் மாந்தோப்பு மேல்நிலைப் பள்ளியில் 5.25 கோடி மதிப்பீட்டில் நவீன கலையரங்கம் கட்டுமான பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவங்கி வைத்தப்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

தமிழகத்தில் இளங்கலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதி முதல் 29ஆம் தேதிவரை பெறப்பட்டது. மொத்தம் 72743 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் விண்ணப்பங்களில் சான்றிதழ்களை இணைக்க மறந்த மாணவர்களுக்காகத் தற்போது இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். இந்நாட்களில் எந்தச் சான்றிதழ்கள் இணைக்கப்படவில்லையோ அந்தச் சான்றிதழ்களை இணைத்தால் மீண்டும் அந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதி பட்டியல் வெளியிடப்படும்.

மேலும் இந்த ஆண்டு இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் இதுவரை 20 விண்ணப்பதாரர்கள் போலிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.

இவர்கள் இந்த வருடத்திற்கான மருத்துவ கலந்தாய்வில் தகுதி நீக்கம் செய்யப்படுவதுடன் அடுத்த மூன்று வருடங்களுக்குத் தமிழ்நாடு மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முறைகேட்டில் ஈடுபட்ட 20 மாணவர்களில்7 மாணவர்கள் பிறப்பிடச் சான்றிதழ் போலியாகவும், ஒன்பது மாணவர்கள் பிறப்பிட சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் போலியாக வழங்கி இருக்கிறார்கள், நான்கு மாணவர்கள் NRI சந்ததிகளுக்கான போலீஸ் சான்றிதழ் வழங்கி, இவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சான்றிதழ்கள் சரிபார்க்கும் இறுதி நாளாக 18. 10.2025 காலை 10மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் பட்டியல் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். 25 ஆம் தேதி பட்டியல் வெளியிட்டவுடன் மத்திய அரசின் கால அட்டவணைப்படி ஜூலை 30 ஆம் தேதி காலை 10 மணிக்குக் கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்