திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் கடந்த 12-ஆம் தேதி 8 வயது பள்ளி சிறுமி தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இளைஞரை தீவிரமாக தேடி வந்தனர்.
வடமாநில இளைஞர் கைது
போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் 13 நாட்களுக்கு பிறகு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜீ பிஸ்வகர்மாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த சனிக்கிழமை திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நீதிபதி ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
போலீஸ் காவலில் எடுக்க மனு
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை புழல் சிறையில் கொண்டு சென்று அடைத்தனர்.இந்நிலையில் இன்று பிஸ்வகர்மாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பாக்கம் போலீசார் திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி இடம் மனு அளித்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நாளை தொடங்கப்பட்டு விரைவில் அவருக்கு காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளிக்கும் என தெரியவருகிறது.