நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டி வரும் நிலையில் கோடை சீசனில் நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்க ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இந்நிலையில் தென்னிந்திய கெனல் கிளப் சார்பில் உதகையில் தேசிய அளவிலான நாய் கண்காட்சியும் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டிற்கான 136-வது மற்றும் 137 - வது தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் தொடங்கியது. 3 நாட்கள் நடத்தபடும் இந்த நாய் கண்காட்சியில் (09-05-25) அன்று நாய்களுக்கான கீழ்படிதல் போட்டியும், நேற்று (10-05-25) மற்றும் இன்று (11-05-25) அனைத்து வகையான நாய்களுக்கான கண்காட்சி மற்றும் இதர போட்டிகளும் நடைபெறுகிறது.
குறிப்பாக டேஷண்ட், கோல்டன் ரிட்ரீவர், கிரேட் டேன் ஆகிய ரகங்களுக்கான சிறப்பு கண்காட்சிகள் நடத்தப்பட்டது. மேலும் ஜெர்மன் ஷெபர்ட், லேப்ரடார், சைபீரியன் ஹச்கி, பீகில் மற்றும் உள்நாட்டு ரகங்களான ராஜபாளையம், கன்னி, சிப்பிபாரை உள்ளிட்ட 55 வகைகளில் 450க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன. இந்த போட்டிகளில் தென் ஆப்ரிக்கா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து சிறப்பு நடுவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு முதல் முறையாக தென்னாப்பிரிக்கா நாட்டைச் சார்ந்த ரூடிசியன் ரிச் பேக் இன நாய் போட்டியில் கலந்து கொண்டது. அதே போல ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தை சார்ந்த முழு கருமை நிறத்தில் கொண்டுவரப்பட்ட நாய், பெல்ஜியம் ஷெப்பர்ட இன நாய்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நாய் கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.