கேரளாவில் நிபா வைரஸ் தொற்று அதிகரிப்பதன் காரணமாக தமிழக, கேரள எல்லையான புளியரை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டபட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸ் பாதிப்பு இல்லை
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “தென்காசி மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை.
கேரளாவில் நிபா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தென்காசி மாவட்டம் தமிழக-கேரள எல்லைப் பகுதியான புளியரை பகுதியில் கால்நடைத்துறை மூலம் சோதனை சாவடி அமைத்து, தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு அனுமதிக்கப்படும் எனவும், கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்து சோதனையை தீவிர படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மலர் கண்காட்சி
மேலும், சாரல் திருவிழாவானது வருகின்ற 19-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என முன்னதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில், தற்போது நிர்வாக காரணங்களுக்காக சாரல் திருவிழாவானது 20-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், ஐந்தருவி பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சியானது 20-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் எனவும் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.