தமிழ்நாடு

"பச்சைக்கிளி முத்துச்சரம்" படப் பாணியில் ஹனி ட்ராப்: ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்!

சென்னையில் "பச்சைக்கிளி முத்துச்சரம்" படப் பாணியில் ரியல் எஸ்டேட் அதிபரைக் கடத்தி பணம், நகைகள் பறிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பச்சைக்கிளி முத்துச்சரம் படப் பாணியில் ஹனி ட்ராப்: ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்!
சமூக வலைத்தளம்மூலம் பழகிய பெண் ஒருவரால் ஹனி ட்ராப் செய்து, ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரைக் கடத்தி, பணம் மற்றும் நகைகள் பறிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த முரளி (47) என்ற ரியல் எஸ்டேட் தொழில் அதிபர், தனது ஃபேஸ்புக் கணக்கில் வந்த `பூஜா` என்ற பெண்ணின் நட்புக் கோரிக்கையை ஏற்றுள்ளார். இருவரும் அடிக்கடி குறுஞ்செய்திகள்மூலம் பழகி, ஹோட்டல்களில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், முரளியை தனிமையில் சந்திக்கலாமென அந்தப் பெண் அழைத்துள்ளார். அதன்படி, இருவரும் கடந்த ஆகஸ்ட் 30 அன்று அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அறை எண் 306-ல் தங்கியுள்ளனர்.

நள்ளிரவில் நடந்த கடத்தல்

நள்ளிரவு 2 மணியளவில், அறையின் கதவு தட்டப்பட்டுள்ளது. முரளி கதவைத் திறந்தபோது, இரண்டு மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். அவர்கள் அந்தப் பெண்ணின் கணவர்கள் எனக்கூறி, முரளியைத் தாக்கி, அவரது காரிலேயே மகாபலிபுரத்திற்கு கடத்திச் சென்றுள்ளனர்.

அங்கு ஒரு அறையில் அடைத்து வைத்து, முரளியிடம் மூன்று லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் கொடுக்க முரளி மறுத்ததால், அவர் அணிந்திருந்த 6 சவரன் தங்கச் சங்கிலி, 3 சவரன் பிரேஸ்லெட்** மற்றும் அவரது கூகுள் பேக்கணக்கிலிருந்து ரூ.20,000 ஆகியவற்றை வழிப்பறி செய்து, அவரைத் தாக்கியுள்ளனர். இதில் முரளி மயங்கியுள்ளார்.

மறுநாள் காலையில் கண் விழித்துப் பார்த்த முரளி, நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டதை அறிந்து மாமல்லபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவம் அரும்பாக்கத்தில் நடந்ததால், அரும்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் இந்தத் திருட்டுக் கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம், நடிகர் சரத்குமார் நடித்த "பச்சைக்கிளி முத்துச்சரம்" திரைப்படத்தின் கதை பாணியில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.