தமிழ்நாடு

India vs Pakistan : அத்துமீறும் பாகிஸ்தான்.. அடித்து விரட்டும் இந்தியா.. கோவையில் பாதுகாப்பு பணி தீவிரம்!

India vs Pakistan War Update : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் அதிகரித்து காணப்படும் சூழலில், விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரித்து காணப்படும் சூழலில், சி.ஐ.எஸ்.எஃப். மற்றும் தமிழ்நாடு காவல் பிரிவு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

India vs Pakistan : அத்துமீறும் பாகிஸ்தான்.. அடித்து விரட்டும் இந்தியா.. கோவையில் பாதுகாப்பு பணி தீவிரம்!
கோவையில் பாதுகாப்பு பணி தீவிரம்
India vs Pakistan War Update : பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடியாக, பாகிஸ்தானிலும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீதும், 'ஆப்ரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் காணப்படுகிறது. இதனையடுத்து ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது.

இரவு தொடங்கி விடிய விடிய நடந்த இந்தத் தாக்குதலை, இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்நிலையில், தற்போது எல்லையில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் அதிகரித்துமூண்ட நிலையில், பாகிஸ்தான் இந்திய விமான நிலையங்கள் உட்பட முக்கிய இடங்களை குறிவைத்து குண்டு வீசி வருகிறது. பாக்கிஸ்தான் எல்லை மீறி நடத்தும் இந்த அத்து மீறலை முறியடித்து, பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி தந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றன.

கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் மற்றும் தமிழ்நாடு பாதுகாப்பு படை போலீஸ் சார்பாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றனர். விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பயணத்தை முடித்து விட்டு வெளியே வரும் பயணிகளாக அனைவரது உடைமைகள் சோதிக்கப்படுகின்றன. வழக்கமாக பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு வரும் நிலையில் தற்போது ஒரு மணி நேரம் முன்னதாக மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையம் வந்தடைகின்றனர். கோவை சர்வதேச விமான நிலையத்தில் வழக்கத்தை விட கூடுதலாக பாதுகாப்பு பணியில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த காவல் பிரிவு போலீசார் பணியமத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கின்றன.